Category: Uncategorized

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்

ஜம்மு: கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக புதிதாக பொறுபேற்ற ஒன்றிய ஐ.டி.துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர்…

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா: 24 மணி நேரத்தில் 40,134 பேர் பாதிப்பு: 39258 பேர் டிஸ்சார்ஜ்: 541 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.24 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.16 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள்,…

முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் ஆவின் அதிகாரிகள் 34 பேர் பணியிட மாற்றம்: நிர்வாகம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் ஆவினில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 34 பேரை பணியிட மாற்றம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறையில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதேபோன்று பணி…

உட்கட்சி மோதல் வலுத்ததால் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா பதவி விலக சம்மதமா?

புதுடெல்லி: நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா டெல்லியில் கூறினார். கர்நாடகா பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில் விஜயபுரா பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், சுற்றுலாத்துறை அமைச்சர்…

நீட் தேர்வின் தாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தார் நீதியரசர் ஏ.கே.ராஜன்..!!

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசால் கடந்த 10ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில்…

எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? : நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை :எதிர்காலத்தில் அரசியலுக்கு நான் வரப்போகிறேனா? இல்லையா? என்ற கேள்விகள் இருக்கிறது; அது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார்.இந்த சந்திப்பு கோடம்பாக்கத்தில்…

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கை கைவிடப்போவதில்லை: நீதிமன்றத்தில் சசிகலா திட்டவட்டம்

சென்னை; அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கை கைவிடப்போவதில்லை என்று சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும், டிடி.வி தினகரன் துணைப் பொதுசெயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைதொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று…

கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுபிடிப்பு: கீழடியில் சாயப்பட்டறைகள் செயல்பட்டிருக்க வாய்ப்பு!

சிவகங்கை: கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே நடத்த 6 கட்ட அகழாய்வில் கீழடியில் மட்டும் சுடுமண்ணால் ஆன கட்டிடங்கள் கண்டறியப்பட்டன. கீழடி நகரம்…

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 27 மாவட்டங்களில் 100க்கும் கீழ் குறைந்தது; 12 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,03,481 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில்…

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய கொடியை மாரியப்பன் தங்கவேலு ஏந்தி வருவார்..! இந்திய பாராலிம்பிக் குழு தகவல்

டெல்லி: டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய கொடியை மாரியப்பன் தங்கவேலு ஏந்தி வருவார் என இந்தியாவின் பாராலிம்பிக் குழு தகவல் தெரிவித்துள்ளது. 2016 ரியோவில் நடந்த பாராலிம்பிக்கில் ஆண்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் மரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…