சென்னை: தமிழகத்தில் ரூ.28,508 கோடி  முதலீட்டில் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 49 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த விழாவில் 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், 5 திட்டங்களின் வணிக உற்பத்தியையும் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்றபோது, கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவியது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த அதிக முக்கியத்துவம் அளித்தார். இதன் பயனாக தற்போது கொரோனா தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தினசரி ஒவ்வொரு துறை அமைச்சர், செயலாளர், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

குறிப்பாக, தமிழகத்தில் தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். தொழில் துறை வளர்ச்சி அடைந்தால், அதிக வேலைவாய்ப்புகள் உருவாவதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என்ற நிலையில், ஆட்சிக்கு வந்து சுமார் 75 நாட்களில், தமிழகத்தில் ரூ.28,508 கோடி முதலீட்டில் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழில் துறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழில் துறை சார்பில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றை சாளர இணையதளம் 2.0வை துவக்கி வைத்தார். இந்த இணையதளத்தில் தற்போதுள்ள முதலீட்டாளர்கள் மட்டுமின்றி புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில் 100 சேவைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக புதிய தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக அனுமதி உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 55,054 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை கையெழுத்தாகின. இது தவிர ரூ.4,250 கோடி முதலீட்டில் 21,630 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதை தொடர்ந்து, ரூ.7,117 கோடி முதலீட்டில் 6,798 பேருக்கு  வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 5 திட்டங்களின் வணிக உற்பத்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் குமார் பன்சல், தொழில்துறை சிறப்பு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன்,  தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

* 9 திட்டங்களுக்கு அடிக்கல்
வ.எண்    நிறுவனம்    உற்பத்தி பொருள் / துறை    முதலீடு கோடிகளில்    வேலை வாய்ப்பு    இடம்    
1. ஏஜி மற்றும் பரதம்    ரசாயனம்    1700    3400    வல்லம் வடகால்    
2. டிசிஎஸ் பேஸ் II    தகவல் தொழில்நுட்பம்    876    15000    சிப்காட் ஐடி பூங்கா, சிறுசேரி    
3. இக்கோஆப் வின்ட் ஏசியா    காற்று விசையாழிகளுக்கான கியர் பெட்டிகள்    621    319    வாலாஜாபாத்    
4. சூப்பர் ஆட்டோ போர்க்    எந்திர உபகரணங்கள்    125    400    காஞ்சிபுரம் மாவட்டம்    
5. குரிட் இந்தியா    காற்றாலை உதிரி பாகங்கள்    320    300    ஸ்ரீபெரும்புதூர்    
6. லிவ்யா பாலிமர் புராடெக்ட்    பாலிமர் பொருட்கள்    200     1200    புதுக்கோட்டை மாவட்டம்    
7. ஐநாக்ஸ் ஏர் புராக்ட்ஸ்    திரவ மருத்துவ ஆக்ஸிஜன்    150    105    ஓசூர்    
8. அன்செல் ஸ்ட்ரீல்    மருத்துவ கையுறைகள்    138    800    சிப்காட் பெருந்துறை    
9. கியூபிக் மாடலர் சிஸ்டம்    மின்சார இணைப்புகள்    120    106    காஞ்சிபுரம் மாவட்டம்    
மொத்தம்    4,250    21,630    

* புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
வரிசை    நிறுவனம்    உற்பத்தி பொருள்    முதலீடு
(கோடிகளில்)    வேலைவாய்ப்பு    இடம்
1. ஜெஎஸ்டபிள்யூ ரீனிவ் எனர்ஜி டூ லிமிடெட்    மின்சக்தி    3000    1,600    தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர்.
2. இசெட்எப் வெப்கோ    மோட்டார் வாகன உதிரிபாகங்கள்    1,800    5,000    சிப்காட் ஒரகடம்- கட்டம் 2.
3. கபிட்டா லேன்ட்    தகவல் தரவு மையம்    1,200    100    அம்பத்தூர், சென்னை.
4. ஸ்ரீவாரு மோட்டார்ஸ்    மோட்டார் வாகன உதிரி பாகங்கள்    1,000    4,500    கோயம்புத்தூர்
5. டிசிஎஸ் பேஸ்-3    ஐடி/ஐடி சேவை    9000    15,00    சிப்காட் ஐடி பூங்கா, சிறுசேரி
6. அவினா இன்டஸ்டிரியல் பார்க்    தொழில் பூங்கா    837    1395    மதுரை, ஓசூர், கோயம்புத்தூர், செங்கல்பட்டு    
7. ஜெ மாட்டாடி    தொழில் பூங்கா    730    50    ராணிப்பேட்டை    
8. வெப்வெர்க்ஸ்/ஐயன் மவுண்டன்    மின்னணுவியல் / ஐடி    700    100    சிறுசேரி / அம்பத்தூர்    
9. இஎஸ்ஆர் இன்ன்வெஸ்மென்ட் ஹோல்டிங்ஸ்    தொழில் பூங்கா    550    120    காஞ்சிபுரம், ஓசூர்    
10. ஜென் டிங் டெவலப்பர்ஸ்    மின்னணுவியல் / ஐடி    519    2000    சிப்காட் வல்லம் வடகால் தொழில் பூங்கா    
11. சுபம் பேப்பர்    நுகர்வோர் பொருட்கள்    500                2000    வடுகம்பட்டி கிராமம், திருநெல்வேலி
12. அர்தனாரி லூம் சென்டர்    ஜவுளி    500    1100    கரூர் மற்றும் சேலம்    
13. ஜுரோஜின் டெவலப்பர்ஸ்    தொழில் பூங்கா    500    300    ஒரகடம், காஞ்சிபுரம் மாவட்டம்    
14. லோட்டஸ் புட்வேர் தைவான்    காலணிகள்    500    6000    திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்    
15. லோட்டஸ் புட்வேர் தைவான்    காலணிகள்    400    5000    பர்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம்    
16. க்ரோத் லிங்க் தைவான்    காலணிகள்    160    2000    செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம்    
17. தமிழ்நாடு பெட்ரோ புராடக்ஸ்    ரசாயன ஆய்வுக்கூடம்    435    300    மணலி, சென்னை    
18. கேகேஆர் குரூப்    ஜவுளி    320    1250    நாமக்கல், கடலூர், புதுக்கோட்டை    
19. ஆர்ச்வ் ஹோல்டிங்ஸ்    விண்வெளி, பாதுகாப்பு    300    400    கோயம்புத்தூர்    
20. ராஜ்ரத்தன் குளோபல் வேர்    பொது உற்பத்தி    300    250    ஸ்ரீபெரும்புதூர் அல்லது ஒரகடம்    
21. ஏஏஜி சென்டர்    விண்வெளி, பாதுகாப்பு    250    100    ஒன் ஹப், காஞ்சிபுரம்    
22. ஹைசிஓங் (கொரியா)    மோட்டார் வாகன உதிரிபாகங்கள்    227    1096    ஸ்ரீபெரும்புதூர்    
23. கேடிவி எடிபிள் ஆயில்ஸ்    சமையல் எண்ணெய்    220    100    சிப்காட் கும்மிடிப்பூண்டி    
24. ஏஎஸ்டி ஆலியாஸ் மோட்டார் வாகன உதிரிபாகம்    175    300    காஞ்சிபுரம்
25. பிரிமியர் பைன் லைனர்ஸ்    ஜவுளி    150    1100    சூலூர், கோவை    
26. டியுப் இன்ஸ்வெஸ்மென்ட்    3 சக்கர மின்வாகனம்    140    580    அம்பத்தூர்    
27. விண்வெளி ஆட்டோமேட்டட் சிஸ்டம்     பொது உற்பத்தி    125    100    உத்திரமேரூர்    
28. ரத்திக் இன்டஸ்டிரியல் மற்றும் லாஜிஸ்டிக் பார்க்    தொழிற் பூங்காக்கள்    110    800    ஸ்ரீபெரும்புதூர்    
29. ரபிட் கன்சல்டிங் சர்வீஸ் லிமிடெட்    உற்பத்தி, சேமிப்புக் கிடங்குகள்    110    33    ஓசூர்    
30. லெட்ஸ் கான்டக்ட் டெக்னாலஜிஸ்    திறன் பயிற்சி    100    1200    தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில்    
31. அராய்மென்ட் பாஸ்ட்னர்ஸ்    பொது உற்பத்தி    100    250    ஸ்ரீபெரும்புதூர் / ஒரகடம் / ஓசூர்    
32. அஸ்லே டெக் இன்டியா    விண்வெளி, பாதுகாப்பு    80    100    ஓசூர்    
33. ஸ்ரீ சர்வலோகா டெக்ஸ்டைல்    ஜவுளி    78    600    சிவகாசி    
34. க்ரையோலோர்    மருந்து பொருட்கள்    70    90    மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம்    
35. லிலெவின் லைப்டெக்    மருந்து பொருட்கள்    55    140    காஞ்சிபுரம்    
மொத்தம்    17141    55054