Month: July 2021

உலகளவில் பிரதமர் மோடி தான் டாப் : மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது!!

டெல்லி, பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை 70 மில்லியன் பேர் பின்தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில், அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2009ம் ஆண்டு முதல் சமூக ஊடகமான டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார்.…

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி: இந்தியாவுக்கே மாபெரும் பலன்!..

சென்னை : மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவில் ஓபிசிக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. நடப்பாண்டிலேயே எம்பிபிஎஸ், எம்.டி, எம்.எஸ், பிடிஎஸ், எம்.டி.எஸ், டிப்ளோமோ ஆகிய…

அதிமுக பொதுக்குழு செல்லாது என வழக்கு நிர்வாகிகள் மனுவுக்கு பதிலளிக்க சசிகலாவுக்கு கால அவகாசம்: சிவில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்…

49 தொழிற்சாலைகள் அமைக்க ரூ.29,000 கோடியில் புதிய ஒப்பந்தங்கள்: 84 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: தமிழகத்தில் ரூ.28,508 கோடி  முதலீட்டில் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 49 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த விழாவில் 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய…

முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் ஆவின் அதிகாரிகள் 34 பேர் பணியிட மாற்றம்: நிர்வாகம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் ஆவினில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 34 பேரை பணியிட மாற்றம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறையில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதேபோன்று பணி…

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்: திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கூறியுள்ளார். 17-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத்தொடரான மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட்…

உட்கட்சி மோதல் வலுத்ததால் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா பதவி விலக சம்மதமா?

புதுடெல்லி: நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா டெல்லியில் கூறினார். கர்நாடகா பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில் விஜயபுரா பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், சுற்றுலாத்துறை அமைச்சர்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்தாலேயே போரூர் ஏரி மீட்கப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை : போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ம் தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி இன்று தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள்…

உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார், இது மக்களுக்கு பொற்காலம் : நடிகர் வடிவேலு புகழாரம்!!

சென்னை : உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துவதாக நடிகர் வடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் தனது படத்தின் காமெடி காட்சியை சுட்டிக் காட்டி அனைவரும் தடுப்பூசி போடும்படியும் வலியுறுத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை…

நீட் தேர்வின் தாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தார் நீதியரசர் ஏ.கே.ராஜன்..!!

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசால் கடந்த 10ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில்…