Month: May 2021

‘மேற்கு வங்க தலைமை செயலாளரை விடுவிக்க முடியாது’!: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மம்தா கடிதம்..!!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைமை செயலாளரை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில், அவரை பணியில் இருந்து விடுவிக்க முடியாது என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா எழுதியுள்ள கடிதத்தில், தங்கள் மாநில தலைமை…

ஒரே நாளில் ஆயிரத்துக்கு மேலாக தீயாய் பரவும் கருப்பு பூஞ்சை நோய்; கர்நாடகாவில் 1250 பேர் பாதிப்பு: பொதுமக்கள் பீதி

கர்நாடகா: கர்நாடகாவில் ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு நகர பகுதி அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.  இந்த பகுதியில் 521 பேர் நோய் பாதிப்புக்கு ஆளான நிலையில், 508…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி:  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இதனையொட்டி பிரதமர் மோடி  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு  பிஎம் கேர்ஸ்…

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

கோவை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் தொடரும் நிலையில் ஆய்வு செய்ய உள்ளார். ஏற்கனவே மே 20ல் கோவை சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதி அறிவிப்புக்கு கமல் பாராட்டு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். பெற்றோர்களை இழந்த தவிக்கும் குழந்தைகளை காக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தேன் என அவர்…

கொரோனாவால் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி வனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி வனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூா் நீதிபதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்…

43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது: தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர், நிதித்துறை செயலாளர் பங்கேற்பு

சென்னை: 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் சார்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார். 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தற்போது தொடங்கி இருக்கிறது. சுமார்…

கொரோனா என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கு புரியவில்லை: இரண்டாவது அலைக்கு முழு பொறுப்பு பிரதமர் மோடிதான்..! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கு புரியவில்லை என்று மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது. கொரோனா 2-வது அலை தாக்கும் என்று ஏற்கனவே நான் எச்சரித்தேன். ஆனால்,…

ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மருத்துவம், வருவாய், பொதுத்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசித்து வருகிறார். இந்த சூழலில் தமிழகத்துக்கு தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உலகம்‌ ஒரு குடும்பம்‌ என்னும்‌ தத்துவத்தை அடைய உறுதுணையாக, மக்களை இணைப்பதிலும்‌, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும்‌ இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து துறை.…