இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதா உழவர்களின் நிலையை உயர்த்தும் என்று ஒன்றிய அரசு கூறினாலும், அது உழவர்களை கொதிக்கும் வெந்நீரிலிருந்து வெளியேற்றி ஏரியும் தனலில் வீசுவது போன்றது என்று உழவர்கள் கூறி ‍எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பி.‍ஜே.பியின் கூட்டணியிலிருந்த கட்சிகள் கூட எதிர்த்து கூட்டணியை விட்டு வெளியேறி விட்டன, ஆனால் நம் தமிழ் நாடு மாநில அரசு அதனை அதரித்து வருகின்றது.

தமிழ்நாட்டின் திமுக கூட்டணி எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி நேற்று தஞ்சை மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்களில் இந்த வேளாண் மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போரட்டமானது, வல்லம் , ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை, கும்பகோணம் திருவிடை மருதூர் போன்ற 40க்கும் மேற்பட்ட ஊர்களில் இப்போராட்டம் நடைப் பெற்றது, இதில் திரளாக உழவர் ‍பெருமக்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.