வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரில் மட்டும் 7 வகையான கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. வாரணாசியில் கொரோனா பாதித்த 130 பேரை கொண்டு சிசிஎன்பி எ ன்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 7 வகையான உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்பட்டிருப்பதாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருமாறியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த டெல்டா மற்றும் பீட்டா வகை கொரோனா வைரஸ்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொண்டவர்களில் 35% பேருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று இருப்பதாகவும் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பி 1 351 வகை கொரோனா வைரஸ்களும் வாரணாசியில் கண்டறியப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகளவில் இருப்பதற்கு டெல்டா மற்றும் பீட்டா வகை வைரஸ்களே காரணம் என்று அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.