தஞ்சையிலிருந்து 22 கி.மி தொலைவிலுள்ள வடூவூரில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியில் பறவைகள் நவம்வர் மாதம் முதல் ஏப்ரல் வரை பல நாடுகளிலிருந்து வந்து தங்கி முட்டையிட்டு குஞ்சுகள் ஈந்து பின் தங்கள் நாடு திரும்புவது வழக்கம், இந்த ஆண்டு மழை மற்றும் காவிரியில் தண்ணிரும் தடையின்றி வருவதால், ஏரி முழுக்க நீர் நிறைந்துள்ளது, பறவைகளும் செப்டம்பர் மாதமே வரத் தொடங்கி விட்டன.
இந்த பறவைகள் புகலிடத்திற்கு அய்ரோப்பியா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து வந்து ஒவ்வொரு ஆண்டும் 20000 மேற்பட்ட பறவைகள் தங்கிச் செல்கின்றன.