சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 5 திட்டங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்று தொடக்கம். ரூ.4 ஆயிரத்துடன் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்களும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு வழங்கப்படுகிறது. ரேஷனில் கொரோனா நிவாரணத்தின் 2-வது தகணையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 1 கிலோ, ரவை 1 கிலோ, உளுத்தம் பருப்பு 1/2 கிலோ, சர்க்கரை 1/2 கிலோ, புளி 1/4 கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவை தலா 100 கிராம் வழங்கப்பட உள்ளது. டீ தூள் 2 பாக்கெட், குளியல் சோப்பு 1, துணி சோப்பு 1, வழங்கப்படகிறது. கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்துக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.