தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்து வருவதால், அறுவடை செய்த முன்பட்ட குறுவை நெல் மழையில் நனைந்து வருவதாக தஞ்சை மாவட்டம் சாலியமங்களம் சுற்றுப் பகுதியை சார்ந்த உழவர்கள் கவலை.

தஞ்சை மாவட்டம் சாலியமங்களம் கிராமத்தில் இதுவரையில் நேரடி ‍நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், பெய்து வரும் அடை மழையால் நெல் மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளதாக உழவர்கள் கூறி, அதனை மாவட்ட ஆட்சி தலைவருக்கும் நேரடி ‍நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே மய்ய அரசு புதிய வேளாண் சட்டத்தின் மூலம் எங்களது வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி உள்ள நிலையில், மழையில் வீணாகும் இந்த வீடயம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளதாக உழவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.