சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உலகம் ஒரு குடும்பம் என்னும் தத்துவத்தை அடைய உறுதுணையாக, மக்களை இணைப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து துறை. அதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள். மருத்துவப் பணியாளர்களுக்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காகவும், அத்தியாவசியக் துறைகளில் பணியாற்றும் அரக ஊழியர்களுக்காகவும் பேருந்துகள் இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் பணி பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. ஒய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும் என்றும்; பணி ஒய்வு மற்றும் விருப்பப் பணி ஒய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஒய்வுகாலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்; ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்களினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. க்குவரத்துத் தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிப்பது உட்பட அனைத்துக் கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து, அதற்கான ஆணையினை வெளியிடுமாறு முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.