தஞ்சை வ.ஊ.சி நகர் திருச்சி தஞ்சை சாலையில் இராமநாதன் மருத்தவமனை நிறுத்தம் மிகப்பழமையானதாகும் அந்தப்பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து மிக நெருக்கடியாக இருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இராமநாதன் மருத்தவமனை திருச்சி தஞ்சை சாலையில் 4க்கும் மேற்ப்பட்ட வங்கிகள், மருத்துவமனை மற்றும் கடைகளும் அமைந்துள்ளதாலும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர மற்றும் கார்களை சாலையின் இரு பக்கமும் நிறுத்தி விட்டுச் செல்வதால் போக்குவரத்து தடைபட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

போக்குவரத்து காவல் துறை இதனைக் கண்காணித்து இந்த போக்குவரத்து ‍நெரிசலை சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.