தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பயிர் 137500 ஏக்கர் விவசாய பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ளது, இது நிர்ணயித்த அளவை விட அதிகமாகும், குறுவை அறுவடை 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இன்னும் 10 நாட்களில் மீதமுள்ளவைகளும் அறுவடைச் செய்யப்படும் என உழவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறுவை நிறைவடைந்ததையடுத்து தஞ்சை மாவட்ட உழவர்கள் சம்மா தாளடி‍ வேளாண்மை வேலையில் இறங்கி விட்டனர். இதற்கிடையில் உழவர்கள், ஒன்றிய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிராக தங்களது எதிர்ப்பினை போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.