ஐதராபாத்: கொரோனா 2வது அலையினால் ஏற்பட்ட பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் தெலுங்கானாவில் முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் முழு ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா முழு ஊரடங்கு காரணமாக தெலுங்கானாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு உத்தரவானது, இன்றுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து வருவதால், முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் கொடுக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான மாநில அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நாளை காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் 1417 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர அம்மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 5,88,259 பேர் குணமடைந்துள்ளனர். அந்த வகையில் கொரோனா பாதிப்பில் குணமடைந்தோர் விகிதம் 96.30% ஆக உள்ளது.