சென்னை: திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 125 பேரும், உதயசூரியன் சின்னத்தின் போட்டியிட்டு வென்ற 8 பேர் என 133 பேர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றக்குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.