சென்னை: தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சகோதரி தமிழிசை சவுந்தரராசன் பொதுவாழ்வில் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார். மேலும் தமிழிசை சவுந்தரராசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம்: ‘61வது அகவையில் அடியெடுத்து வைக்கும்  இந்த நன்னாளில் தங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்வதோடு, எண்ணியது அனைத்திலும் தொடர்ந்து வெற்றி கண்டு,எண்ணம் போலவே வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று மனதார  வாழ்த்துகிறேன்’ என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.