சென்னை: தமிழகத்தில் மேலும் 26  ஐபிஎஸ்  அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று 46 எஸ்.பி.களை தமிழக அரசு பணியிடமாற்றம் செய்த்திருந்தது. இந்நிலையில் அதனை தொடர்ந்து மேலும் 26ஐபிஎஸ்  அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழகஅரசு பிறப்பித்துள்ளது. குறிப்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக பொன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் சென்னை காவல்துறை தலைமை தலைமையக ஏ.ஐ.ஜி.யாக எம்.துறை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு எஸ்.பி.யாக சுஜித்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி.யாக பெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் செயல்படக்கூடிய சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக சண்முக பிரியா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் நுண்ணறிவு பிரிவினுடைய மதுவிலக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி.யாக அசோக்குமாரை தமிழக அரசு நியமித்துள்ளது. குற்றப்புலனாய்வு மதுரை மண்டலா பிரிவு எஸ்.பி.யாக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சத்தி ரயில்வே எஸ்.பி.யாக அதிவீர ராம பாண்டியனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவலர் நலப்பிரிவு உதவி ஐ.ஜி.யாக ஜி.சம்பத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ள.