செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் அவர்களின் பிறந்த தினம் தமிழ்நாடெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் பெரியார் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது, சென்ற ஆண்டு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது பெரியார் அவர்களின் பிறந்தநாள் செய்தியென்றும், இந்த ஆண்டு கூடுதலாக தமிழ்நாடு முழுவதும் சுவரெழுத்தக்களும் எழுதப்பட்டு உள்ளது.

சுயமரியாதையின் சுடரொளியாய், பகுத்தறிவின் தந்தையாய் விளங்கும் பெரியார் அவர்களின் பிறந்தநாள் ‍இப்படி விமர்சையாக கொண்டாடுவது, காலத்தின் கட்டாயம் என்கின்றனர்.