சண்டிகார் : தடுப்பூசி விற்பனை இந்திய அரசுடன் மட்டும்தான் என்றும், மாநிலங்களுக்கு தடுப்பூசி நேரடி சப்ளை இல்லை என்று அமெரிக்க மருந்து நிறுவனமான மார்டனா தெரிவித்துள்ளது. 18 – 44 வயது உள்ள பிரிவினருக்கு தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு பல மாநிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நாடி உள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், தங்களது மாடர்னா தடுப்பூசியை நேரடியாக பஞ்சாப் மாநில அரசுக்கு வழங்க முடியாது என தெரிவித்துவிட்டது. மாடர்னா நிறுவனத்தின் கொள்கைப்படி இந்திய அரசுடன் மட்டுமே தடுப்பூசி கொள்முதல் விவகாரத்தை கையாள முடியுமே தவிர மாநிலங்களுடனோ, தனியார் துறையினருடனோ கையாள முடியாது என பஞ்சாப் மாநில அரசின் தொடர்பு அதிகாரி விகாஸ் கார்க் தெரிவித்தார்.