கல்லணையில் முதலைப்பண்ணை உள்ளது, தொடர் மழையால் காவிரியாற்றில் தண்ணிர் திறந்து விடப்படுகின்றது இதில் தப்பிய முதலைகள் வெண்ணாற்றில் உலவுதாக வனத்துறை எச்சரிக்கை பாதகையை வெண்ணாற்று தடுப்பணை அருகே வைத்துள்ளது.

வெண்ணாற்றில் முதலைகள் உலவுவதால், பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு அங்கு ஆற்றில் குளிக்கவோ கால் நடைகளை குளிப்பாட்டாவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிதம்பரம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு முதலை தாக்கி ஒருவர் உயிரிழந்த செய்தியும் அறிவோம் எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.