வருகின்ற செப் 15 ஆம் தேதி தஞ்சையின் முதன்மையானப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நடைபெறாது, தஞ்சை நகரத் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு நடைபெற உள்ளதால் இந்த மின் விநியோக நிறுத்தம் செயல் படுத்தப்படும் என தமிழ் நாடு மின் உற்பத்தி,பகிர்மான கழகத்தின் நகர உதவிச் செயற்பொறியாளர் கூறியுள்ளார்

மின் பகிர்மானம் நிறுத்தப்படும் பகுதிகள், கீழவாசல், பழையபேருந்து நிலையம், காந்திஜீ சாலை, ரயிலடி,தெற்கு வீதி, மேல வீதி, கீழ வீதி, சினிவாசப்புரம், வண்டிக்காரத்தெரு, சிவாஜி நகர், மானம்புச்சாவடி, எஸ்.என்.எம் நகர் மேரிஸ் கார்னர், வ.ஊ.சி நகர், கோரிக்குளம், அன்பு நகர், பூக்காரத் தெரு, நாகை சாலை ஆகிய பகுதிகள் அடங்கும்.