தஞ்சை மாவட்ட உழவர்கள் பயிர் காப்பிட்டு இழப்பிட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியுள்ளனர், இதனால் இதனை தடுக்கும் பொருட்டு ஏராளமான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த பயிர் காப்பிட்டுத் தொகையானது டெல்டா மாவட்டத்தின் 916 வருவாய் கிராமங்களுக்கு வழங்குவது விடுபட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு சென்றடைய வேண்டிய பயிர் காப்பிட்டுத் தொகை சென்றடையாமல் உள்ளது, இதனை உடனே வழங்கக் கோரி தஞ்சை டெல்டா உழவர்கள் இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.