கொரோன தொற்றுக் காரணமாக தஞ்சை பெரிய கோயிலுக்குள் பொது மக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது, பின்னர் அதனை தளர்த்தி 10 வயதிற்கு மேலும் 65 வயதுக்குள்ளும் உள்ளவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, அதே நேரம் வருகின்ற பொதுமக்களின் வெப்பநிலை அறிந்தே அனுமதிக்கப்பட்டனர்.

நேற்றிலிருந்து பெரிய கோயிலுக்குள் அனைத்து வயதினரையும் அனுமதிப்பதுடன் வெப்பநிலை கண்டறிவதையும் நிறுத்தி விட்டனர், எனவே பொதுமக்கள் கோயிலில் வழிபடவும், அங்குள்ள புல் தரைகளில் அமரவும் எந்த வித தடையுமின்றி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.