செப்டம்பர் 21 முழு அடைப்பு நீக்கப்பட்டு மக்கள் பாதுகாப்புடன் செயல்பட அரசு வலியுறுத்தி செயல்படுத்தி வருகின்றது, என்ன தான் அரசு அறிவுறுத்தினாலும் மக்கள் பாதுகாப்பு குறித்து பெரிதாகக் கவலைப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க இந்த பாதுகாப்பு வசதிகளை தங்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியாத மக்களும் அதிகமாகவே நம் நாட்டில் உள்ளனர்.

இதனால் கொரோனாவின் பாதிப்பை பெரிதாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அரசு திணறுகிறது. இந்‍நிலையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.