தஞ்சை தெற்கு வீதியில் இந்துஅறநிலையத்துறை அலுவலர்கள் குடியிருப்பு வீடுகள்உள்ளன, இதில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் இராஜமாணிக்கம் என்பவர் குடியிருந்துள்ளார், இவரது துணைவியர் ஒரு வாகன விபத்தில் இறந்துள்ளார் அதன் பின் அவர் வேலை இடமாற்றம் செய்து வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றுள்ளார்.
அவரது மாறுதலுக்கு பின்னால் அந்த வீட்டில் யாரும் குடிவரவில்லை, இதனால் வீட்டிலேயே மரம் வளர்ந்து பாழடைந்து போனது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் அதில் தூக்கு போட்டு இறந்ததாகவும், அவரது ஆவி அந்த வீட்டில் சுற்றுவதாகவும் வதந்திகளை பரப்பி அதன் மூலம் சமூக விரோதச் செயல்களும் நடைபெற்று வந்துள்ளது.
இதை நம்பி அந்த பகுதி மக்கள் பீதியடைந்து அந்தப்பகுதிக்கு மக்கள் செல்வதை தவிர்த்து வந்த நிலையில் அது சமூக விரோதச் செயலின் கூடாரமாக மறியது, இதை அறிந்த திராவிடர் கழகத்தினர் தஞ்சை மாவட்ட தலைவர் வழக்கறிஞர்சி.அமர்சிங் தலைமையில் ஏராளமான கழகத்தோழர்கள் 10-09-2020 அன்று காலை 10.30மணியளவில் பாலடைந்த அந்த இல்லத்திற்கு சென்று அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் விழிப்புனர்வை ஏற்படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பி அங்கு கூடியிருந்த ஊடக செய்தியாளர்களிடம் இந்த இடத்தை தமிழக அரசு உடனடியாக புரனமைப்பு பணிகளை மேற்க்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்