கடலோர தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையை கஜாப்புயல் புரட்டிப்போட்டது, இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர், குறிப்பாக விவசாயிகள், கடுமையான பாதிப்பிற்கு உள்ளனார்கள், தோப்புகள் முற்றிலுமாக வீழ்ந்தன, மற்றும் நெல் விவசாயமும் கடுமையான பாதிப்பிற்குள்ளானது, தென்னை மரங்கள் ஆயிரக்கணக்கில் வேரோடு சாய்ந்தது, அதனை அகற்றுவதே அவர்களுக்கு ‍பெரும் பாடாகியது.

கஜாப் புயலுக்கு பின்னால் தென்னை விவசாயம் ‍பெரும் சரிவை சந்தித்தது, விளைச்சலில் பெரும் வீழ்ச்சியும் காய்களில் தேங்காய் பருப்புகள் எண்ணெய் சத்தற்று எடை குறைவாக இருந்ததால், அதனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல், உள்ளுர் சந்தைக்கு அதிக அளவில் வந்ததால் அதன் விலை கடும் வீழ்ச்சிக்குள்ளாகி விலை ரூ 10 மற்றும் 12க்கும் விற்றது.

இந்த ஆண்டு விளைந்த தேங்காய் நல்ல எண்ணெய் சத்துடனும் எடைக் கூடுதலாகவும் உள்ளதால் ஏற்றுமதியும் மற்றும் உள்ளுர் சந்தைகளில் காய் ஒன்றுக்கு ரூ 25 வரை விலையும் வருவதால் தேங்காய் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.