தஞ்சை வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த தேர்தலாக இருந்தாலும் அது அதிமுக தலைமையில் அமைந்த கூட்டனி கீழ் தான் அமையும் என்று அறிவித்துள்ளார். திருவாருர் வருகை புரிந்த முதல்வர் காவிரி துணை வடிநில பகுதிகளை நவினப்படுத்த 3384 கோடியில் ஒரு திட்டம் உருவாக்கப்படும் என்றும், கொள்ளிடம் ஆற்றில் 191 கோடிச் செலவில் நடந்துவரும் புதிய குடிநீர் திட்டம் பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெறுமென்றும் திருவாரூரில் தெரிவித்துள்ளார்.