தஞ்சையில் நடிகர் திலகத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் நேற்று அக்டோபர் 1 அன்று தமிழகம் எங்கும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது, தஞ்சையின் மைந்தரான சிவாஜி அவர்களுக்கு தஞ்சையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட விழுப்புரம் கணேசன் அவர்கள் அண்ணா அவர்களின் சிவாஜி கண்ட இந்து இராஜ்யத்தில் சிவாஜி வேடத்தை அத்தனை அழகாக நடித்துக் காட்டியதால், தந்தை பெரியார் அவர்களால் சிவாஜி என்று அழைக்கப்பட்டார், அன்று முதல் அவர் சிவாஜி கணேசன் ஆனார்.

தமிழகத்தின் மார்லன் பிரான்டோ என்று அறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்ட சிவாஜி அவர்கள் எற்காத வேடமென்று ஒன்றில்லை, அவரது சொந்த ஊரான தஞ்சையில் சிவாஜி அவர்களை சிறப்பிக்கும் வகையில் மணிமண்டபம் அருகே முழுவுருவச் சிலை ஒன்று அமைத்து சிறப்பு செய்யப்பட்டது, அந்தச் சிலைக்கு பல்வேறு இயக்கத்தார் இரசிகர்கள் மாலை அணிவித்து பிறந்தநாளை கொண்டாடினர்.