தஞ்சையில் தனிமனித பாதுகாப்பை சரிவர கடைபிடிக்கத் தவறுவதால் மிக விரைவாக கொரோனா பரவுதாகத் தகவல் நேற்று மட்டும் 226 பேருக்கு கொரோனா ‍தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றனாது தஞ்சை மாவட்டத்தில் கடந்த 12 நாட்களில் 2276 பேருக்கு தொற்று உண்டாகி உள்ளது. பேருந்து போன்ற பொது இடங்களில் பொது மக்களும், பேருந்து நிர்வாகமும் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதும் பாதுகாப்பு கவசம் அணியாமல் வெளியில் வருவதை குறித்தும் நமது thanjai.today கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை முகமாக படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது, பொதுமக்கள் தனிமனித பாதுகாப்பை உறுதி படுத்திக்கொள்ளாமல் போவார்கள் எனில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இயல்வு வாழ்க்கைக்கு வர மிக நீண்ட காலமாகும் என் அறிவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.