தஞ்சையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேல் மழைக் கொட்டித் தீர்த்தது, ஏற்கனவே தமிழ்நாடு வானிலை மய்யம் 15 மாவட்டங்களுக்கு மேல் மழைப் பெய்யும் என அறிவித்திருந்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான, நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சையில் நல்ல மழைப் பெய்யும் என அறிவித்திருந்தது.

இந்த கொரோனா கால ஊரடங்கால் வாகன இயக்கங்கள் குறைந்து கால நிலையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவேத் தெரிகிறது. இதனால் இந்த ஆண்டு பரவலாக எல்லா மாவட்டங்களிலும் நல்ல மழை பொழிந்து வருகின்றது.