இந்திய ஒன்றிய அரசின் வேளாண் துறை குறித்தான மசோதாவை எதிர்த்து தஞ்சையின் பல பகுதிகளில் அந்த மசோதாவின் நகலை எரிக்கும் போராட்டத்தை காவிரி மீட்பு குழுவினர் தலைமையில் பூதலூர், செங்கிப்பட்டி, உழுர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்து வருகின்றது, ஆனால் தமிழ்நாடு அரசு இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

பி.ஜே.பி கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவால் இடைத்தரகர்களை ஒழிக்கின்றேன் என்ற பெயரில் பன்னாட்டு வர்த்தக முதலைகள் இந்திய வேளாண் துறையில் நுழைந்து அனைத்தையும் கைப்பற்ற போவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.