நீண்ட வரலாற்று பெருமைக்குரிய, 1870ஆம் ஆண்டு முதல் ஜில்லா கோர்ட் என்ற பெயரில் இயங்கி பின்பு ஆக்ட் III 1973யின் படி மாவட்ட செஷன்ஸ் கோர்ட் என வழங்கப்பட்டு 150 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியத்திற்கு எதிரில் இயங்கி வந்த தஞ்சை நீதி மன்றம், இப்போது அரசு பெண்கள் கல்லூரிக்கு அருகே, மணிமண்டபத்திற்கு எதிரே இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது, கொரோணா காலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டமையால் முழுமையாகச் செயல்படாமல் இருந்தாலும், நல்ல விசாலமான பகுதியில் சிறப்புற ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகமாக உருவாக்கப்பட்டுள்ளது, இது பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக அமையும் என்பதில் அய்யமில்லை.