கோவை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் தொடரும் நிலையில் ஆய்வு செய்ய உள்ளார். ஏற்கனவே மே 20ல் கோவை சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, தற்போது கோவை மாவட்டம் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 கார் ஆம்புலன்ஸ் சேவையையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆட்சியர்களுடன் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.