சென்னை: கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா தாக்கத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதி தேவையான அளவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். வெண்டிலேட்டர் வசதி, ஆக்சிஜன் குறைபாடு, படுக்கைகள் இல்லாத பகுதிகளில் தான் கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது தேவையான அளவு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர்களை கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு எடுத்துவருவதாக கே.என் நேரு குறிப்பிட்டார். என்வேர் மூன்றாவது அலையை யாரும் பாதிக்காத வகையிலே தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.