டெல்லி: கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முன்களப் பணியாளார்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, வேகமாக உருமாறி புதிய சவால்களை கொடுத்துக் கொண்டிருக்கும் கொரோனாவைத் தடுக்க தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் கண்டிப்பாக உருமாற பல வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ள மோடி, அதனை எதிர்கொள்ள தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், முதல் இரண்டு அலைகளில் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து ஒரு லட்சம் முன்களப் பணியாளர்களை தயார்படுத்தி வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் அனைத்து அரசு மையங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா 3-வது அலை அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் நிகழக்கூடும் என எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.