டெல்லி: கொரோனா 3-வது அலையை சமாளிக்க இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா தொற்றின் 2-வது அலையால் இந்தியா திணறிக் கொண்டிருக்கும்போது, 3-வது அலை தவிர்க்க முடியாதது என அரசுக்கான விஞ்ஞானம் சார்ந்த ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்த வந்த நேரத்தில், கடந்த மாதத்தில் இருந்து திடீரென 2-வது அலை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்தது.

முதல் அலையில் சமாளித்த பொது மக்களும், அரசுகளும் இந்த கோர தொற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக தினந்தோறும் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. 2-வது அலையில் நோயாளிகளுக்கு அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியா திணறி வருகிறது. பல்வேறு உயிரழப்பும் ஏற்பட்டு வருகிறது.

மேலும், மே 15ம் தேதிக்குப்பிறகு கொரோனா சூறாவளில் சற்று சாந்தமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் 3-வது அலை தவிர்க்க முடியாதது என்று அரசுக்கான விஞ்ஞானம் சார்ந்த ஆலோசகர் விஜய் ராகவன் எச்சரித்துள்ளார். விஜய் ராகவன் ‘‘3-ம் கட்ட அலை தவிர்க்க முடியாதது. இந்த வைரஸ் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. ஆனால், எந்த நேரத்தில் தாக்கி உச்சத்தை அடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதிரிக்கும், ஆனால், நாம் 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள்’ கொரோனா 3-வது அலையை சமாளிக்க இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்துவதற்காண பணிகளை தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். 3-வது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதால் அதை சமாளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.