சென்னை: கொரோனா நோய்த் தொற்று தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கவனமாக கடைபிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் விலியுறுத்தியுள்ளார். கொரோனா 2-வது அலை முதல் அலையைவிட மிக மோசமானதாக இருக்கிறது எனவும் பரவல் முதல் அலையை விடத் கூடுதலாக உள்ளது என கூறுனார். வட மாநிலங்களில் இருந்து வரம் தகவல் அச்சம் தருவதாக உள்ளன எனவும் தெரிவித்தார். 

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை துண்டிக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என கூறினார். தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆகவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறினார். மேலும் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.