டெல்லி: தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னெறி உள்ளது. மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 32,36,63,297 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 32,33,27,328 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை இங்கிலாந்தில் இங்கிலாந்து  டிசம்பர் 87,67,74,990, அமெரிக்காவில் டிசம்பர் 1432,33,27,328, இத்தாலியில் டிசம்பர் 274,96,50,721, ஜெர்மனியில் டிசம்பர் 277,14,37,514, பிரான்ஸில்  டிசம்பர் 275,24,57,288, இந்தியாவில் ஜனவரி 1632,36,63,297 தடப்பூசி செலுத்தப்படுள்ளன என கூறப்பட்டுள்ளது. 

தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள், முகாம்கள் என பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் முன் வர வேண்டும் என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டு வருகிறது. 

Tags:

கொரோனா தடுப்பூசிபணிஅமெரிக்காஇந்தியா