தஞ்சை கொரோனா தொற்றுக் காரணமாக மாவட்ட விளையாட்டு கழகத்தின் அன்னை சத்யா விளையாட்டுத் திடல் கடந்த அய்ந்து மாதங்களுக்கு மேல் திறக்கப்படாமல் இருந்தது.

தஞ்சை இப்போது மெல்ல ஒட்டம் எடுக்கத்துவங்கியதால் மாவட்ட விளையாட்டு நீர்வாகம் அன்னை சத்தியா விளையாட்டு அரங்கினை இன்று முதல் திறக்க முடிவு செய்துள்ளது.

விளையாட்டு அரங்கம் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மற்றும் மாலை 3 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்குமென்றும், அங்குள்ள நீச்சல் குளம் மறு அறிவிப்பு வரும் வரை மூடியே இருக்குமென அறிவித்துள்ளது, இதில் 10 வயதுக்கு குறைவான குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்களும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிவிப்பால் வீட்டிலே முடங்கி கிடந்த விளையாட்டு வீரர்களும் விளையாட்டு பிரியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.