ஊர் விழா

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில் பேராலயத் திருவிழா இன்று தொடக்கம்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில் பேராலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம், கொரணா காரணமாக மாலை பக்தர்கள் யாருமின்றி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்புருஸ் கொடியேற்றித் தொடங்கி வைக்கிறார். இத்திருவிழா இன்று தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது, 7ஆம் தேதி பெரியத் ‍தெரு ஊர்வலமும், 8ஆம் தேதி அன்னை ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவும் நடைபெறும், கொரணா காலமாதலால் பக்தர்கள் கலந்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.