உடல் நலம் பேணுவதில் கவனம் செலுத்துவது இப்போது எல்லாத்தரப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும், நடைப்பயிற்சி தினமும் செய்வதால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வராமல் தடுப்பதும், நோய் உள்ளவர்களுக்கு கட்டுப்பட்டுடன் இருக்கவும் இந்த நடைப்பயிற்சி உதவுகின்றது.

‍கொரோனா தொற்று காரணமாக கடந்த அய்ந்தரை மாதமாக மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது குறைவாகவும் பொதுவிடங்களில் கூடவும் நடக்கவும் தடை விதித்திருந்தால், மக்கள் வீட்டிலேய‍ உடற்பயிற்சிகளை செய்து வந்தனர்.

அரசு செப்டம்பர் மாதம் முதல் இதனை தளர்த்தியதால், தஞ்சை அன்னை சத்யா விளையாட்டுத்திடல் விளையாடவும், நடைப்பயிற்சி மேற்க் கொள்ளவும் சென்ற வாரம் திறந்து விடப்பட்டது, இதனால் நடைப்பயிற்சி மேற்க்கொள்வோர் உற்சாகமாக வந்து நடக்கத் தொடங்கினர், முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிர்வாகம் அனுமதிக்கவில்லை, அதேவேளை, ஒவ்வொருவருக்கும் உடலின் வெப்பநிலை சோதனை செய்த பின்பே, தஞ்சை மாவட்ட விளையாட்டுக் கழகம் விளையாட்டுத்திடலுக்குள் அனுமதித்தது.