கடந்த ஆகஸ்ட் 29ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கிய வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில் பேராலயத் திருவிழா இன்று செப்டம்பர் 8ஆம் நாள் முடிவுற்றது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொள்வதோடு, கேரளாவிலிருந்து மிக அதிகமான பக்தர்கள் இதில் கலந்து கொள்வது வழக்கம், இந்த கொரொணா காலத்தில் பக்தர்கள் வருகை புரிய வேண்டாம் என்று தஞ்சை மறைமாவட்ட ஆயரால் வேண்டிக் கொள்ளப்பட்டது.