தஞ்சை அருகே உள்ள களக்குடி என்கின்ற பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரையில் திறக்கப்பட வில்லை, ஆண்டு இறுதி கணக்கு காரணமாக அக்டோபர் 5ந் தேதி திறக்குமென அரசால் அறிவிக்கப்பட்டது, அதன் படி 150க்கு மேற்ப்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டது.
அரசு ஆணைக்கு பின்னரும் தஞ்சை களக்குடியில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், கடந்த 15 நாட்களாக உழவர்கள் நெல்லை நேரடி கொள்முதல் விற்பனை செய்வதற்காக காத்துக் கிடக்கிறார்கள்.
தினமும் 15 நாட்களாக நெல்லை காய வைப்பது குவித்து வைத்து பதமாக இருக்கிறார்கள் நிழலின் நிறமும் மாறி வருகிறது சில இடங்களில் முளைத்து விடுகிறது இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது இதனால் நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று உழவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
