ஆக்டோபர் 1 முதல் 9,10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு வரலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது காட்டுபாடுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆசிரியரோ மாணவர்களோ பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.

மாணவர்கள் பள்ளி வருகையை சுழற்சி முறையில் இரு பிரிவுகளாக பிரித்து ஒரு பிரிவு மாணவர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் மற்‍றொரு பிரிவினர் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் வர அனுமதித்துள்ளது.

பள்ளியின் வகுப்பறைகள் மிகத் தூய்மையாகவும், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தவும் போதுமான இடைவெளியைக் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.