தஞ்சையில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால், பூச்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது,நாள் ஒன்றுக்கு தஞ்சை பூச்சந்தையில் 1000 டன் அளவில் பூக்கள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் மழைக்காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்தும் பறிக்க இயலாமலும் போவதால் எளிதில் குறைந்த விலைக்கு விற்கும் அரளி, செவந்தி பூக்கள் கிலோ ரூ 100க்கும், ரூ100க்கு விற்ற மல்லிகை ரூ600க்கும், கானகாம்பரம் ரூ1000த்திற்கு மேலும் விற்றது.